குடியரசுக் கட்சிக்கு எலான் மஸ்க் வழங்கிய 366 மில்லியன் டொலர்கள்!

#Election #United_States #world_news #LANKA4 #ElonMusk #Politics
Abi
1 hour ago
குடியரசுக் கட்சிக்கு எலான் மஸ்க் வழங்கிய 366 மில்லியன் டொலர்கள்!

அமெரிக்காவில் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில், குடியரசுக் கட்சி தனது காங்கிரஸ் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆதரவாக, உலகின் முன்னணி செல்வந்தரான எலான் மஸ்க் இதுவரை சுமார் 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார்.

இந்த நிதியில் 276 மில்லியன் டொலர்கள் கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னரான குறுகிய காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி மீண்டும் பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக மஸ்க் பெருந்தொகையைச் செலவிட்டு வருகிறார்.

தேர்தல் நிதி அறிக்கைகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தேர்தல் களத்தில் மிகப்பெரிய தனிநபர் அரசியல் நன்கொடையாளராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!