நேற்று ஜனாதிபதியாகிய ரணிலின் கீழ் இன்று புதிய அமைச்சரவை - பிரதமரானார் தினேஷ் குணர்வர்த்தன

Nila
3 years ago
நேற்று ஜனாதிபதியாகிய ரணிலின் கீழ் இன்று புதிய அமைச்சரவை - பிரதமரானார் தினேஷ் குணர்வர்த்தன

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்றையதினம் புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

தினேஷ் குணவர்தன இலங்கையின் 15 ஆவது பிரதமராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4