உலகிற்கே எடுத்துக்காட்டாக மாறிய இலங்கை என சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

Kanimoli
3 years ago
உலகிற்கே எடுத்துக்காட்டாக மாறிய இலங்கை என சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

அதிக கடன்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளைக் கொண்ட நாடுகளுக்கு இலங்கை ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போது ஜோர்ஜியேவா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

உக்ரைன் யுத்தத்துடன், உலகில் உணவுகள் மற்றும் பொருட்களின் விலைகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக, கொள்கை ரீதியான தலையீடுகள் அவசியமாகும்.

இந்த நிலைமைக்கு இலங்கையை ஓர் அடையாளமாக அவதானிக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4