இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு - பலர் பாதிப்பு

#people #Indonesia #LANKA4 #Warning #Blast #volcano #L4
Prasu
2 months ago
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பு - பலர் பாதிப்பு

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் அமைந்துள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை இன்று சக்திவாய்ந்த முறையில் வெடித்தது. 

இந்த வெடிப்பின் காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் மேகம் வானில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பின் பின்னர் அப்பகுதியில் எச்சரிக்கை நிலை தொடர்ந்தும் அமலில் உள்ளது. 

அதிகரித்த எரிமலைச் செயல்பாடுகள் காரணமாக அந்தப் பகுதி ஏற்கனவே அபாய மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வெடிப்பினால் பலர் பாதிக்கப்பட்டதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எரிமலையை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!