கிளிநொச்சியில் 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
#SriLanka
#Police
#Kilinochchi
#Lanka4
#Bike
#Safety
#L4
Prasu
1 hour ago
கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினரின் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வாகன இலக்கத் தகடுகள் எதுவும் பொருத்தப்படாமல் இயக்கப்பபட்டமை மோட்டார் சைக்கிள்களுக்கு உரிய முறையான சட்டபூர்வ ஆவணங்கள் இன்றிச் செலுத்தப்பட்டமை தகுந்த சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத நபர்களால் இவை ஓட்டி வரப்பட்டமை ஆகிய காரணங்களால் இந்த மோட்டார் சைக்கிள்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே