தொடர்ந்தும் சேவையாற்றுவேன் - கோட்டாபய

Kanimoli
3 years ago
தொடர்ந்தும் சேவையாற்றுவேன் - கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என, கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இன்று நாடாளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை அதன் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கோவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.  

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அவை பலன் தரவில்லை. நாட்டுக்கான சேவையை ஆற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4