ராமகவில் நபர் ஒருவர் படுகொலை இரு மகன்களும் காயமடைந்துள்ளனர்
Kanimoli
2 years ago

கொழும்பின் புறநகர் பகுதியான ராமகவில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அவரது இரு மகன்களும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கணேமுல்லைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



