பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் தங்கச் சங்கிலி அபகரிப்பு!
Mayoorikka
2 years ago

யாழ்ப்பாணம் - மீசாலை, டச்சு வீதி ஊடாக தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள், ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் தாயின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



