மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர் வெற்றிடங்கள்
Kanimoli
2 years ago

நாடளாவிய ரீதியில் மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், 22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியதாக தெரியவந்துள்ளது.



