இலங்கைக்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும்-சுவிஸ் தூதர்
Kanimoli
2 years ago

இலங்கைக்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார்.
சமீபத்தில், இலங்கை நீதித்துறை அமைச்சரான விஜயதாச ராஜபக்ச, சுவிஸ் தூதரான Dominik Furglerஐ இலங்கை நீதித்துறை அமைச்சகத்தில் சந்தித்தார்.
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதாரச் சூழல் குறித்து நீதி அமைச்சர் அவருக்கு விவரித்தார்.
இலங்கையும் சுவிட்சர்லாந்தும் வலுவான பொருளாதார மற்றும் அரசியல் நட்பு தொடர்பான நீண்ட வரலாறு கொண்டவை என்று கூறிய விஜயதாச ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலை மேற்கொள்ள சுவிட்சர்லாந்தின் உதவியை கோரினார்.
அவருக்கு பதிலளித்த சுவிஸ் தூதரான Dominik Furgler, இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கை அவற்றை மேற்கொள்வதற்கு தன்னாலான உதவிகளை அளிப்பதாகவும் தெரிவித்தார்.



