சாத்தான் 2 வகை ஏவுகணை சோதனைக்கு தயாராகும் ரஷ்யா

#Russia #Missile
Prasu
3 years ago
சாத்தான் 2 வகை ஏவுகணை சோதனைக்கு தயாராகும் ரஷ்யா

ரஷ்யா சாத்தான் 2 வகை ஏவுகணையை சோதனை செய்ய தயாராகியுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ரஷ்ய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம் (ஜூன்) 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்குள், ரஷ்யா சாத்தான் 2 வகை ஏவுகணையை சோதனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அளவுக்கு பெரிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tigilsky மாகாணத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதி, Karaginsky மாகாணத்தின் தென்மேற்குப் பகுதி, மற்றும் Ust-Kamchatsky மாகாணத்தின் வடமேற்குப் பகுதி ஆகிய இடங்களில் ஏவுகணையின் பாகங்கள் அல்லது அதை ஏவும் வாகனத்தின் பாகங்கள் தெறித்து விழக்கூடும் என்பது போன்ற அபாயங்கள் உள்ளதால், அந்த பகுதியிலுள்ள மக்கள், பொருட்கள், விமானங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பயணிக்க தடை விதிக்கப்படுவதாக Kamchatka பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!