மஹிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது!
Prathees
2 years ago

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு சொந்தமான நாவலப்பிட்டி டவுன் எய்ட் பவுண்டேஷன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 100,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்க நாவலப்பிட்டி மாவட்ட நீதிபதியும் நீதவானுமான நிலந்த விமலவீர இன்று உத்தரவிட்டார்.



