ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிப்பு!

Reha
4 years ago
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிப்பு!

பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், நாடாளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மஹரகம காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் கட்டணம் அறவிடாமல் பெருமளவிலான சட்டத்தரணிகள் கடுவலை நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தமை அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மாலை கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4