அம்பாறையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்பு!

#SriLanka #Ampara #Weapons #LTTE #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
அம்பாறையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு, பக்மிட்டியா காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

விசேட அதிரடி படையினரால் நேற்று முன்தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. 

காட்டுப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பகுதியானது  யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்ததுடன், அவர்கள் கெரில்லா போர் உத்திகளுக்காக இவ்வாறான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த ஆயுதங்கள் நீண்டகாலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் தற்போது துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாவும் சுட்டிக்காட்டப்பட்டுளு்ளது. 

மேலும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக  தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!