யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

#SriLanka #Jaffna #Death
யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்  நேற்று (04) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

இரண்டையர்களில் ஒருவரான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற குழந்தையே உயிரிழந்தார்.

இரட்டையர்கள் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேனீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார்.

மீள வந்து பார்த்த போது குழந்தை ஒருவரைக் காணவில்லை. வீட்டு வளவில் தேடிய பின் கிணற்றை பார்த்த போது குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்தமை கண்டறிப்பட்டது.

உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கட்டுக் கிணற்றை சுற்றி தகரத்தினால் வேலியிடப்பட்டுள்ளது. அதில் ஏறிய போதே குழந்தை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4