மதுபானங்களின் விலைகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
Mayoorikka
3 years ago

மதுபானங்களின் விலைகளை உள்நாட்டு நிறுவனங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பியர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருத்தப்பட்ட விலைகளின் அறிவிப்புகளை உடனடியாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்குமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் வழங்கப்படாமை காரணமாக மதுபான விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.



