அநுரவின் குற்றச்சாட்டை மறுக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால்!

Mayoorikka
4 years ago
அநுரவின் குற்றச்சாட்டை மறுக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால்!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தாம் தொடர்பில் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான குரல் எனும் செயற்திட்டத்திற்கு அமைவாக பல்வேறு விடயங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு அனுமதியின்றி முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் நிதி வழங்கியதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

6.5 மில்லியன் ரூபா இவ்வாறு குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கும் போதே,  முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் அதனை மறுத்துள்ளார்.

அத்துடன், தமக்கு எதிராக தவறாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4