இலங்கைக்கு 125 மில்லியன் ரூபா அவசர நிதி உதவியை வழங்கும் இத்தாலி

Prathees
4 years ago
இலங்கைக்கு 125 மில்லியன் ரூபா அவசர நிதி உதவியை வழங்கும் இத்தாலி

இலங்கை அரசாங்கத்திற்கு  125 மில்லியன் ரூபாய் நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது.

கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின்இ இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம், இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக  இந்த நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விநியோக வலைப்பின்னல் முகாமைத்துவ செயல்முறையின் கீழ், சுகாதார அமைச்சினால் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப வெளிநாடுகளில் உள்ள விநியோக பிரிவின் ஊடாக நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும் என்று இத்தாலிய தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4