ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் ஜனாதிபதி செயலகத்தினுள் இருந்து வெளியேறிய புகையால் பதற்றம்!

Nila
4 years ago
ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் ஜனாதிபதி செயலகத்தினுள் இருந்து வெளியேறிய புகையால்  பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து திடீரென புகை வெளியேறுவதாக  அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்  

இந்நிலையில் இவ்வாறு புகை வெளியேறுவது மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலி முகத்திடலில் பெருந்தொகையான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ளவர்கள் இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தரப்பில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என அங்குள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4