ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அதிர்ச்சி கொடுத்த உலகின் பயங்கரமான ஹெக்கர்கள்?

Nila
4 years ago
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அதிர்ச்சி கொடுத்த உலகின் பயங்கரமான ஹெக்கர்கள்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உலகில் மிக பயங்கரமான கணனி ஹெக்கர்கள் அணி எனக் கூறப்படும் எனோனிமஸ் அணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியிட்டு ஹெக்கர்கள் அணி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி 14 நாட்களுக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும். அதிகாரங்களை புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் காணொளியில் கூறியுள்ளனர்.

அப்படி செய்யவில்லை என்றால், ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

எனோனிமஸ் என்ற இந்த அணியினர் உலகில் பிரபலமான தலைவர்கள் மறைத்து வைத்துள்ள சொத்துக்களை வெளியிட்ட அணியினர் என கருதப்படுகிறது.

பென்டோர ஆவணங்கள், பனாமா ஆவணங்கள், விக்கிலீக்ஸ் என கடந்த காலங்களில் உலகில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் தகவல்களை இந்த அணியினரே வெளியிட்டுள்ளனர்.

இந்த அணியினர் ஏற்கனவே உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய படையினரின் தகவல்கள், பெயர்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4