வயோதிபப் பெண்ணை படுகொலை செய்து நகைகள் கொள்ளையடிப்பு!
Mayoorikka
3 years ago

தலவாக்கலை - மடக்கும்புர தோட்ட புதுகாடு பிரிவில் வயோதிபப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய காதில் அணிந்திருந்த தண்டட்டி மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
84 வயதுடைய கருப்பன் மூக்காயி என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



