இலங்கையில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு இந்திய அமைச்சர் வருகை
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், தனது விஜயத்தின் போது திடீரென கொழும்பில் உள்ள லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள குறிப்பில், இலங்கையின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும், இலங்கைக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்திய அரசாங்கம் வழங்கிய நிதியுதவி இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.



