புலிகளின் இலக்கை அடைய தமிழ்க் கூட்டமைப்பு முயற்சி! - கம்மன்பில குற்றச்சாட்டு

#gammanpila
Prasu
4 years ago
புலிகளின் இலக்கை அடைய தமிழ்க் கூட்டமைப்பு முயற்சி! - கம்மன்பில குற்றச்சாட்டு

"பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளால் துப்பாக்கி மூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெறுவதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது."

- இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசிபெற்ற வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"சர்வகட்சி மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றதில் உள்நோக்கம் இருக்கின்றது. தற்போதைய நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்குக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர். அதாவது புலிகளால் துப்பாக்கி மூலம் பெறமுடியாமல்போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெறக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர்.

அனுமான் இலங்கையைத் தீயிட்டு அழித்தார் எனக் கூறப்படுகின்றது. அதுபோலவே அசிங்கமான அமெரிக்கரும் தற்போது நாட்டை அழித்து வருகின்றார். அரசுக்கான பெரும்பான்மையை இல்லாது செய்தால் அவர் அமெரிக்கா ஓடிவிடுவார்" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4