ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம்!

Mayoorikka
4 years ago
ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் சத்தியாக்கிரகப் போராட்டம், இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சி பேதமின்றி வெள்ளை ஆடையுடன் கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரியே இந்த சத்தியாகிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4