அடுத்த 100 நாட்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிக் பாஸ் 10
#India
#Tamil
#LANKA4
#Bigg_Boss
#L4
Prasu
1 hour ago
தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான 'பிக்பாஸ் தமிழ்' தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.
கடந்த ஒன்பதாவது சீசனில் தனது தனித்துவமான பேச்சாலும், எதார்த்தமான அணுகுமுறையாலும் ரசிகர்களைக் கவர்ந்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இந்த மைல்கல் சீசனையும் தொகுத்து வழங்க மீண்டும் களம் இறங்குகிறார்.
புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே