10 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்புக்கு வந்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!
#SriLanka
#Flight
#UnitedKingdom
#International
#LANKA4
#Katunayaka
Abi
1 hour ago
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 777 ரக விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்கப்படும் இந்தப் பருவகால விமான சேவை, பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயண வசதிகளை மேம்படுத்துவதுடன், நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.