ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Prabha Praneetha
4 years ago
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் முதன்முறையாக ரயில் ஆசனங்களை இணையவழியூடாக (Online) முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரயில் பயணிகள் எதிர்காலத்தில் அனைத்து ரயில்களுக்குமான ஆசனங்களையும் இணையவழியூடாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

கொழும்பு கோட்டை - பெலியத்த, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, தலைமன்னார் மற்றும் கண்டி போன்ற நீண்ட தூர ரயில்களுக்கான பயணச் சீட்டுக்களையும் முன்பதிவு செய்வதற்கான வசதியும் கிட்டவுள்ளது.

தற்போது புகையிரத பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அமைப்புக்களின் மூலம் இலத்திரனியல் புகையிரத பயணச் சீட்டுக்களை வழங்கவும், அந்த பயணச் சீட்டுக்களை QR குறியீடு மூலம் சரிபார்க்கவும் முடியும் என்பதால் எதிர்காலத்தில் ரயில்வே திணைக்களத்தில் காகிதப் பயன்பாடு குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4