எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி படுகொலை!
Mayoorikka
3 years ago

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



