நாளை பாப்பரசரை சந்திக்கவுள்ள கர்தினால்
Mayoorikka
3 years ago

வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கொழும்பு பேராயர் ரஞ்சித் மல்கம் கர்தினால் அவர்கள் நாளை (27) காலை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ,இத்தாலி உட்பட ஐரோப்பா முழுவதிலும் உள்ள இலங்கையர்களை வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்திற்கு நாளை காலை 10.30 மணிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ,ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



