ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக இருக்கலாம்: உக்ரைன் முன்னாள் பிரதமர்

புடின் போரை நிறுத்தப்போவதில்லை. “ரஷ்யப் படையெடுப்பு ‘மூன்றாவது உலகப் போரின் தொடக்கமாக
இருக்கலாம்’ என்கிறார் உக்ரைனின் முன்னாள் பிரதமர்.
“24/02 வியாழன் காலை தொடங்கிய தாக்குதல் உலகளாவிய ஒரு முக்கியமான தருணம். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிகாரத்தை மட்டுமே அங்கீகரிக்கிறார் என்பதால் வலுவான எதிர்வினை தேவை. ” என்று உக்ரைனின் முன்னாள் பிரதமரான ஒலெக்ஸி ஹோன்சாருக் கூறினார்.
2019 மற்றும் 2020 க்கு இடையில் பிரதமராக பணியாற்றிய திரு ஹோன்சாருக் கூறினார்: “இது மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக இருக்கலாம். நாம் அதை உணர வேண்டும். ஏனென்றால் புடின் நிறுத்த மாட்டார்.”
உக்ரைனுக்கு நேட்டோ நேரடி இராணுவ ஆதரவை வழங்க வேண்டும் எனவும் , பொருளாதார தடைகள் போதாது எனவும் எச்சரித்தார்.
பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் அவர் மாஸ்கோ உக்ரைனின் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்பியதாக அவர் கூறினார்.
“புடின் நம் நாட்டை அழித்துவிடுவார் அல்லது “ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவார்” என திரு ஹோன்சாருக் கூறினார். உக்ரைனைப் பாதுகாக்க அவரும் அவரது நண்பர்களும் தெருக்களில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ரஷ்யா உக்ரைன் மீது மேற்கொண்டிருக்கும் படையெடுப்பில் தலையீடு மேற்கொள்ளும் எந்தவொரு நாடும் எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று புடின் மற்ற நாடுகளை எச்சரித்துள்ளார்.



