அடக்குமுறை என்ற குற்றச்சாட்டு பொய்; ஜெனிவா கூட்டத்தொடருக்கான காய் நகர்தல் என்கின்றார் அமைச்சர் சரத் வீரசேகர

Mayoorikka
3 years ago
அடக்குமுறை என்ற குற்றச்சாட்டு பொய்; ஜெனிவா கூட்டத்தொடருக்கான காய் நகர்தல் என்கின்றார் அமைச்சர் சரத் வீரசேகர

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாவதாக அவர் கூறினார்.

கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து நேற்று  பாராளுமன்றில் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டைக் காட்டி கொடுத்தது என குற்றம் சாட்டிய சரத் வீரசேகர, இனிமேலும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!