ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு; 5 பாகிஸ்தானிய வீரர்கள் படுகொலை
#world_news
#Afghanistan
#Pakistan
Mugunthan Mugunthan
3 years ago

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில், குர்ரம் மாவட்டத்தில் இருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனை ராணுவ ஊடக விவகார பிரிவு தெரிவித்து உள்ளது.
இதேபோன்று பாகிஸ்தானிய வீரர்களும் பயங்கரவாதிகளை நோக்கி பதிலடி கொடுத்துள்ளனர். இதில், அவர்களுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் ஐ தலீபான் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.



