அதிக ஆபத்துள்ள பட்டியலான சிகப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் 32 நாடுகளின் விபரங்கள் உள்ளே.
Keerthi
3 years ago

ஜேர்மனியின் 'அதிக ஆபத்துள்ள நாடுகள்' பட்டியலில் மேலும் மூன்று நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புதுப்பிப்பின் படி, பிப்ரவரி 6 முதல் அதிக ஆபத்துள்ள நாடுகளின் (High-Risk Areas) பட்டியலில் ஆர்மீனியா, அஜர்பைஜான், பாலஸ்தீனிய பிரதேசங்கள் ஆகிய மூன்று நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால், இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கடுமையான நுழைவு விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மறுபுறம், பிப்ரவரி 6 முதல், 32 நாடுகள் இனி அதிக ஆபத்துள்ள பட்டியலில் ஒரு பகுதியாக இருக்காது என்று ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதிக ஆபத்துள்ள பட்டியலில் இருந்து நீக்கப்படும் 32 நாடுகள் பின்வருமாறு:
- எக்குவடோரியல் கினியா
- எத்தியோப்பியா
- பெனின்
- போட்ஸ்வானா
- புர்கினா பாசோ
- கேப் வெர்டே
- ஐவரி கோஸ்ட்
- ஜிபூட்டி
- எரித்திரியா
- காபோன்
- காம்பியா
- கானா
- கினியா
- கினியா பிசாவ்
- கேமரூன்
- கொமரோஸ்
- லைபீரியா
- மாலி
- மொரிட்டானியா
- மொசாம்பிக்
- நைஜர்
- நைஜீரியா
- காங்கோ குடியரசு
- சாவோ டோம் மற்றும் பிரின்சிபி
- செனகல்
- சியரா லியோன்
- சோமாலியா
- சூடான்
- தெற்கு சூடான்
- டோகோ
- சாட்
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு



