தமிழர் பிரச்சனையை தத்தெடுக்கும் இந்தியா... தகட்டுக்குள் மாட்டுமா இலங்கை ஆழும் தரப்பு?
Keerthi
3 years ago

தமிழ் மக்களின் நீடித்த தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடுவதை தென்னிலங்கை சிங்கள மக்கள் விரும்பமாட்டர்கள் என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (29) இடம்பெற்ற நீதியமைச்சின் நீதிக்கான அணுகல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) இதனைத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை உள்நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே சரியானது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ்த் தலைமைகள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்கான வாய்ப்பு, விரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



