வடக்கில் மீண்டும் உக்கிரமெடுக்கும் கொரோனா: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Mayoorikka
3 years ago
வடக்கில் மீண்டும் உக்கிரமெடுக்கும் கொரோனா: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வட மாகாணத்தில் மீண்டும் கொரோனா  நோய் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் 4 கொரோனா உயிரிழப்புகள் வடக்கில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 ஜனவரி மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 726 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என கூறினார்.

தற்போது ஒமைக்ரோன் நாட்டின் பல பகுதிகளிலும் வேகமாக பரவி வருகின்றது. அத்தோடு வடக்கு மாகாணத்திலும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என கூறினார்.

எனவே இந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள   பூஸ்டர் தடுப்பூசியினை  கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!