கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட 'நீதிக்கான அணுகல்' என்ற நடமாடும் சேவை
Keerthi
3 years ago

வடமாகாண மக்களை மையப்படுத்தி நீதி அமைச்சின் நடாத்தப்படும் 'நீதிக்கான அணுகல்' என்ற நடமாடும் சேவை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனூடாக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வாழ்வாதார அபிவிருத்தி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. நீதி அமைச்சின் துணை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை வளாகங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் கௌரவ கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிராந்திய அரசியல் அதிகார சபை உட்பட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




