4,000 ஆசிரியர்களுக்கு அதிபர் பதவி வழங்குவதற்கான அரசியல் ஆட்டம் குறித்த அம்பலம்!

#SriLanka #strike #Employees
4,000 ஆசிரியர்களுக்கு அதிபர் பதவி வழங்குவதற்கான அரசியல் ஆட்டம் குறித்த அம்பலம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் சங்க கூட்டமைப்பு சுகயீன விடுமுறையுடன் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகிறது. பதிவு செய்யப்பட்ட 11 அதிபர்கள் சங்கங்களில் 8ல் 11,000 அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிபர்கள் கூட்டணியின் உறுப்பினர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேல்மாகாண சுகாதார பணியாளர்கள் நேற்று முன்னெடுத்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது. ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 16 சுகாதார சங்கங்களின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், தீர்க்கப்படாத பிரச்சினைகளால் எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க சுகாதார வல்லுநர் சம்மேளனம் தயாராகி வருகின்றது. தொடர் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கும் திகதி நாளை தீர்மானிக்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மேலும் இலங்கைச் செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!