மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம்

Prabha Praneetha
3 years ago
மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம்

முழுமையான தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய ,இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ள அனைவரும் முழுமையான தடுப்பூசிக்காக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றிப்பது அவசியம் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக உலகளாவிய ரீதியில், இலங்கை சிறந்த நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

கொவிட் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் இலங்கையில் ஒரு ஆய்வகம் மாத்திரமே இருந்தது. அது தற்போது 27ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டமையினால், நாட்டை வழமையான நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தில் ஒரு இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஆயிரத்து 50 வைத்தியசாலைக் கட்டமைப்புக்களில் சமய நிகழ்வுகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!