எதிர்வரும் வெள்ளி முதல் 4 மணிநேரம் மின் துண்டிப்பு!

Reha
3 years ago
எதிர்வரும் வெள்ளி முதல் 4 மணிநேரம் மின் துண்டிப்பு!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாளை முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அடுத்த வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறையைத் தொடர முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இலங்கை மின்சார சபை நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது வறட்சியற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் நீர்மின் நிலையங்கள் முழு கொள்ளளவுடன் இயங்கி வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!