ஒரு கிலோ காய்கறி ரூ.1 லட்சம் விலை என்றால் நீங்கள் நம்புவீர்களா...?

Keerthi
3 years ago
ஒரு கிலோ காய்கறி ரூ.1 லட்சம் விலை என்றால் நீங்கள் நம்புவீர்களா...?

அம்ரேஷ் சிங் என்ற பீகார் விவசாயி உலகின் விலை உயர்ந்த பயிரான 'ஹாப் தளிர்கள்' ’hop shoots' பயிரிடுகிறார். தனது பண்ணையில் வளர்க்கப்படும் இந்த காய்கறியை கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று வருகிறார்.
ஹாப் ஷுட்ஸ் அடிப்படையில் ஹூமுலஸ் லுபுலஸின் பூக்கள் பூத்து காயாக மாறுகின்றன. செரிமானப் பிரச்னையை சரி செய்வதில் ஆரம்பித்து புற்றுநோய் செல்களைக் கொல்வதற்கான சிகிச்சையில் பயன்படுவது வரை இந்த காயின் சிறப்பம்சங்கள் ஏராளம் என்கிறது இணையம்.
10 மீ உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையைச் சேர்ந்தவை ஹாப் ஷுட்ஸ். மேலும் 20 வருடங்கள் வரை வாழக்கூடியது. 

ஹாப் தாவரத்தின் பூ, காய், பழம், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாக இருப்பதால், ஒரு கிலோ 85,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட இந்தத் செடி, உலகின் பல்வேறு நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக இந்தத் தாவரத்தைப் பயிரிட்டவர் அமரேஷ் சிங் மட்டுமே.
இவர் தான் உலகின் விலை உயர்ந்த பயிரான ’ஹாப் தளிர்கள்' பயிரிட்டு வெற்றிபெற்றுள்ளார். அம்ரேஷ் இந்தப் பயிருக்கான செடிகளை வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து வாங்கி இருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!