கொரோனாவை கண்டறிய எக்ஸ்ரே பரிசோதனை- ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல்

Keerthi
3 years ago
கொரோனாவை கண்டறிய எக்ஸ்ரே பரிசோதனை- ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிய தற்போது ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆர்.டி.ஏ. பரிசோதனை உள்ளிட்ட முறைகள் உலகம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இது தவிர வேறு சில முறைகள் மூலம் விரைவாக கொரோனாவை கண்டறிவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தி ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதை கண்டறியும் வழியை மேற்கொண்டுள்ளனர். எக்ஸ்ரே மூலம் கண்டறியப்படும் கொரோனா பரிசோதனை 98 சதவீதம் துல்லியமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வெஸ்ட் ஸ்காட்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது;-

“கொரோனாவை கண்டறிய விரைவான மற்றும் நம்பகமான கருவிகளின் தேவை நீண்டகாலமாக உள்ளது. பி.சி.ஆர். சோதனையை விட எக்ஸ்ரே சோதனை வேகமாக இருக்கும். கொரோனா நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள் மற்றும் நிமோனியா உள்ளவர்கள் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 3,000 படங்களின் ஸ்கேன்களை ஒப்பிடுவதற்கு எக்ஸ்ரே தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனாலும் நோய் தொற்றின் ஆரம்ப கட்டங்களில் எக்ஸ்ரேவில் கொரோனா அறிகுறிகள் தெரியவில்லை. எனவே பி.சி.ஆர். சோதனைகளை முழுமையாக மாற்ற முடியாது. எங்களது ஆய்வை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!