தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்ததை ஒப்புக் கொண்ட வைத்தியர்
பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைப்பதற்கு தானே திட்டமிட்டதாக 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுவரை பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் அவருக்கு தேவாலயத்தில் பகை இருந்தது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் மீது கைக்குண்டுத் வைக்கப்பட்ட சம்பவத்தில் தாம் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட விசாரணைகளின் போது, தான் 1974 ஆம் ஆண்டு அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் ஒரு பௌத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
அப்போது தேவாலயத்தில் இருந்த பாதிரியார் தனது மனைவி பௌத்த மதம் என்றபடியால் காலையில் திருமண வைபவத்துக்கான பூஜையை தமக்கு வழங்காததால் மனமுடைந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை மீது குண்டுவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில்இ அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரை அனுமதிக்க மருத்துவமனை மறுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
அதே வைத்தியசாலையில் தனது சக ஊழியரால் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபருக்கு அவ்வப்போது பணம் வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி மீது கொண்ட அளவற்ற அன்பினால் விரலில் மோதிரம் அணிவித்ததாகவும்இ மனைவியின் சாம்பலை மோதிரத்தில் போட்டதாகவும் பொலசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் தெரிவித்திருந்தார்.