வவுனியாவில் அதிகாலையில் தீக்கரையான மதுபானசாலை!
#Vavuniya
Nila
3 years ago
வவுனியா – வைரவர் புளியங்குளம் பகுதியிலுள்ள மதுபானசாலை (BAR) ஒன்றில் தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்து இன்று (20) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீயினால், குறித்த மதுபானசாலை முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
மின்சார ஒழுக்கே, தீ பரவியமைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.வவுனியா தீ அணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.