1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளது

Prabha Praneetha
3 years ago
1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளது

கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.ஏ.அனில் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் அச்சிடப்பட்ட மிகப் பெரிய தொகை இது என்றும் அதற்கான காரணங்களையும் அனில் பெரேரா விளக்கினார்.

"நாங்கள் கடந்த காலத்தில் அரசாங்கத்திடம் இருந்து எங்கள் திறைசேரி உண்டியல்களை பெற்றுக்கொண்டு, முதன்மை சந்தையில் இருந்து சுமார் 1,400 பில்லியன் ரூபாய்களை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளோம். இது இரகசியமில்லை."

கேள்வி: வரலாற்றில் இதுவரை இவ்வளவு பணம் அச்சிடப்பட்டதில்லையா?

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,

"இவ்வாறான பணத்தொகை அச்சிடப்படவில்லை. இந்த நிலை உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் இலங்கையில் மாத்திரம் திறைசேரி உண்டியல் ஹோல்டிங்ஸ் அதிகரிக்கவில்லை.

ஐக்கிய நாடு உட்பட ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் மத்திய வங்கி இவ்வாறான அதிகரிப்பை வெளியிட்டுள்ளது.

ஏனென்றால், இந்த அழுத்தத்தை காலப்போக்கில் மக்களிடம் கொண்டு செல்லாமல், அதன் சுமைகளை மக்கள் மீது சுமத்தாமல் இருப்பதற்கு இது நடந்துள்ளது.

இதனை செய்யாமல் இருந்திருந்தால் இதனை விட பாரிய அழுத்தத்தை நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!