COVID-19 விதிகளை மீறிய KFC - நிர்வாகம் மீது புகார்
Prasu
3 years ago
KFC விரைவு உணவக நிர்வாகத்தின்மீது COVID-19 விதிமீறல்கள் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி ஸ்காட்ஸ் ரோட்டில் உள்ள KFC விரைவு உணவகக் கிளையில் விதிமீறல்கள் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
4 வாடிக்கையாளர்களை நோய்த்தொற்றுக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஏதும் பின்பற்றாமல் உணவகத்திற்குள் அனுமதித்ததாக நம்பப்படுகிறது.
அந்தக் காலக்கட்டத்தில் இரண்டு பேருக்குமேல் ஒன்றுகூட முடியாது ஆனால் உணவகத்தில் நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
விதிமீறல் செய்த அந்த நால்வரின் தகவல்களும் நீதிமன்ற ஆவணத்தில் இடம்பெற்றிருந்தது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்