பெண்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமான இடத்தில் இருக்கின்றார்கள்

Keerthi
2 years ago
பெண்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமான இடத்தில் இருக்கின்றார்கள்

மனித இனம் காடுகளில் சுற்றித்திரிந்த காலத்தில் பெண்கள் குடும்பத்தினரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்பவர்களாக செயல்பட்டார்கள்.
காடுகளில் அலைந்து தானியங்கள், விறகுகள் சேகரித்து சமைத்து உணவு வழங்கி கொண்டுஇருந்தாலும் சிதறிய தானியங்களை மழைநீரில் முளைத்து விளைந்து பெருகுவதை கூர்ந்து நோக்கியிருக்கிறார்கள்.

அதை பின்பற்றி விதைக்கவும், அறுவடை செய்யவும் கற்றிருக்கிறார்கள். இதனால் மனித சமூகத்திற்கு விவசாயத்தை பெண்களே தந்திருக்க முடியும் என்ற கருத்து உண்டு.
அச்சம், மடம், நாணம், பயிற்பு என்பன பெண்களின் அறங்களாகவும், வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம் இவை ஆண்களின் அறங்களாகவும் இலங்கியங்களில் கூறப்படுகிறது.
பிற்காலத்தில் கற்பு என்பது பெண்களின் தலையாய அறமாக கூறப்பட்டுள்ளது.

பெண்கள் கல்வியின்றி மூடப்பழக்கங்களில் சிறைப்பட்டு, சிந்திக்கும் திறனின்றி தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் இல்லச் சிறையில் பூட்டப்பட்டு சமயலறையில் முடங்கி கிடந்துள்ளனர்.
'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்ற நிலையில் கல்வியே வேண்டாம்; வீட்டு வேலை செய்யத் தெரிந்தால் போதும் என்ற நிலை இருந்தது.

சம உரிமை
• மக்கள் தொகையில் ஒரு பாதி இருக்கும் பெண்களை அடிமையாக நடத்தும் எந்த ஒரு நாடும் உயர்வு பெற்றதில்லை.
• பெண்களுக்கு சம உரிமையும், மதிப்பும் கொடுக்க வேண்டும் எனவும் பெண் கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்கு சிறந்த வழி எனவும் வழிகாட்டுகிறார் மகாகவி பாரதியார்.
• மேலும்"மாதர் தம்மை இழிவு செய்யும்மடமையைக் கொளுத்துவோம்வைய வாழ்வு தன்னில் எந்தவகையிலும் நமக்குள்ளேதாதர் என்ற நிலைமை மாறிஆண்களோடு பெண்களும்சரிநிகர் சமானமாகவாழ்வோம் இந்த நாட்டிலே"என்று விடுதலைப்பாட்டில் பெண்களின் நிலை பற்றி பாடியுள்ளார் பாரதி.

பெண் கல்வி
• பெண்களின் முன்னேற்றத்திற்கு பாரதியார் கூறும் மூன்று வழிகள்.
• முதலாவது உபாயம் (வழிமுறை) கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி; மூன்றாவது உபாயம் கல்வியே!
• ஆதாவது கல்வியை தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதும் பயன்படாது என்கிறார்.
• ஓர் ஆணைப் படிக்க வைத்தால் அவன் மட்டும் முன்னேறுவான்.
• ஒரு பெண்ணை படிக்க வைத்தால் அந்தக் குடும்பமே முன்னேறும் என்றார் ஈ.வெ.,ராமசாமி.
• 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்எத்தொழில் எதுவும் தெரியாமல்இருந்திடல் உனக்கே சரியாமோ?'என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடலை நினைவூட்டுவது அவசியமாகிறது.

கைத்தொழில்
• நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
• அயலார் கையை எதிர்நோக்குவது அவச்செயல் ஆகும் என காந்தி கூறியதுபோல, மண்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், பாய் முடைதல், கூடை முடைதல், ஆடு மாடு, கோழி வளர்த்தல், தேன் எடுத்தல் போன்ற சிறுகுடிசைத் தொழில்களை செய்து அந்த காலத்தில் தங்களது பொருளாதாரத்தை ஓரளவிற்கு பெண்கள் உயர்த்திக்கொண்டார்கள்.
• பெண்கள் அன்று இருந்த நிலைக்கும், தற்போதுள்ள நிலைக்கும் பல ஆரோக்கியமான மாற்றம் நிகழ்ந்துஉள்ளதை மறுக்க முடியாது.
• 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்று பெண்களை பெற்றோர் கண்ணும் கருத்துமாய் வளர்க்க வேண்டும்.
• 'மங்கையராய் பிறப்பதற்கே - நல்லமாதவம் செய்திட வேண்டும் அம்மா'என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல் பெண்களின் பிறப்பனை பெருமையாகவே இச்சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது எனலாம்.
• இன்று படித்த பெண்கள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.
• 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்இளைப்பில்லை காணென்று கும்மியடி...ஏட்டையும் பெண்கள் தொடுவதுதீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்றவிந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்'என பெண் விடுதலைக்கு கும்மியில் பாரதி பாடியவை நனவாயிற்று.
• பெண் குலத்தின் பெருமைதற்போது பெண்கள் கல்வி அறிவு பெற்று ஆட்சித்துறை, தொழிற்துறை, அறிவியல், மருத்துவம், சட்டம், காவல், இலக்கியம், கல்வி போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றி வெற்றி நடை போடுவதையும் நம்மால் காணமுடிகிறது.
• விண்வெளி பொறியியல் முடித்து, முனைவர் பட்டமும் வென்று, விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா, இந்திய முதல் காவல்துறை ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடி, விமான ஓட்டுனர் துர்கா பானர்ஜி, ஆங்கிலகால்வாயை நீங்கி கடந்த ஆர்த்திஷா, பஸ் ஓட்டுனர் வசந்தகுமாரி போன்றவர்கள் பெண்களின் பெருமையை வெளி உலகிற்கு பறைசாற்றியவர்கள்.
• பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கறிந்து வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து, பிறரும் வாழ பெண்கள் வழிவகை செய்கிறார்கள்.
• முன்னேற்ற பாதையில் முனைந்து சென்று நாடு உயர, மேன்மையுற தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
• 'கட்டமைக்கப்பட்டவற்றில்கட்டுப்பட்டு இருந்தோம்வீறுகொண்டு எழுந்தோம்விண் உயர முயற்சி செய்தோம்அன்று முடியவில்லை
• இன்று 21ம் நுாற்றாண்டில் சாதிக்க முடிந்ததுவீரப் பெண்களால்!'எனவே பெண்களை நாளெல்லாம் போற்றுவோம்!