பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்... பரிகாரமும்

#Astrology
பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்... பரிகாரமும்

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வராது.

ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் கடுமையான உழைப்பாளிகள் .சனி வலிமை பெற்றவர்கள், அதிகமாக சொந்த தொழில் செய்பவர்களாகவும், பணப்புழக்கம் அதிகம் இருப்பவர்களாகவும் இருப்பார்கள். மிகக் குறிப்பாக பரம்பரை தொழிலை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் உழைத்த உழைப்பை புதன் வலிமையானவர்கள் ஏமாற்றி பறிப்பார்கள்.

மேலும் இவர்கள் தொழிலின் ஆழம் புரியாதவர்கள். புதனின் வலிமை குறைவால் சரியாக திட்டமிடத் தெரியாது. தவறான முதலீடு (குறிப்பாக பங்கு சந்தை) செய்வதுடன், தவறான வாடிக்கையாளரை தேர்வு செய்து பெரும் முதலீட்டை இழப்பார்கள். அத்துடன் ஜாமீன் கையெழுத்து போட்டு அதற்கு பொறுப்பேற்று ஏமாறுவார்கள்.

புதன், சனியுடன் கேது சம்பந்தம் பெறுபவர்கள் தவறான தொழில் கூட்டாளிகளை தேர்வு செய்து வழக்குகளை சந்திப்பார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் பெற்று மறைவு ஸ்தானமான 6, 8, 12-ல் இருக்கும். 

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4