இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரை கைப்பற்றிய இந்தியா

#India #SriLanka #LANKA4 #Cricket #L4
Prasu
3 months ago
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரை கைப்பற்றிய இந்தியா

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்றது.

இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

தம்புல்லவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 377 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 94 ஓட்டங்களும் கெய்க்வாட் 40 ஓட்டங்களும் திலக் வர்மா 67 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை ஏ அணி 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இலங்கை அணி சார்பில், சதீர 52 ஓட்டங்களும் வனுஜ 62 ஓட்டங்களும் வியாஸ்காந்த் 39 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!