டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்தது!

#SriLanka #Dengue #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்தது!

நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 46,000-ஐத் தாண்டியுள்ளது. 

 அதன்படி, ஜனவரி மாதம் முதல் நாட்டில் 46,037 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார். 

 மேலும், தற்போது தினமும் 600 முதல் 650 டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் பதில் பணிப்பாளர் கூறினார்.

 ஜூன் முதலாம் திகதி முதல் 12,196 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகக் கூறிய அவர்  இது ஒரு மாதத்தில் பதிவான டெங்கு நோயாளிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என்றும் குறிப்பிட்டார். 

 மாகாண வாரியாக ஒப்பிடுகையில், மேற்கு மாகாணத்தில் இருந்துதான் அதிகபட்ச டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளன. அங்கு  51.75 சதவீதம் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4