கண்டதும் காதல் - காதல் விதிகள் - பாகம் - 1

கண்டதும் காதல் - காதல் விதிகள் -  பாகம் - 1

உங்கள் கண்கள் பார்த்தவுடன் உங்களுக்கான சரியான நபரை தேர்வு செய்துவிட்டால் , நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்ட சாலி. ஆனாலும் உங்களுக்கு உறுதி ஏற்படும்வரை எந்த ஒரு ஈடுபடும் கொள்ள வேண்டாம் . ஏனெனில் , மண விலக்கு கோரிய பலர் சொல்லும் இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டதில்லையா ? நான் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனா என்று என்னுடைய கல்யாணத்தின் போது கூட எனக்கு சந்தேகம் இருந்தது .

என்ன சொல்வது ? திருமண நாளில் கூட இன்னும் சந்தேகத்தோடு ஒருவர் இருந்தால் , அவர்கள் சரியான முடிவை எடுக்கவில்லை என்றுதான் அர்த்தம் . அவர் செய்வது மிக பெரிய தவறு . சரியான நபர் என்று உங்களுக்கு தோன்றவில்லை என்றால் , நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதோ பிள்ளைகள் பெற்று கொள்வதோ இயலாத ஒன்று . இதில் உறுதியில்லாமல் திருமணம் செய்துகொள்ள துணிவது பெரும் பைத்தியக்காரத்தனம்

ஆரம்பத்தில் உங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தால், ஒரு சில வாரங்கள் ஆகலாம் , சில
மாதங்களோ , ஏன் ஒரு சில ஆண்டுகளோ கூட ஆகலாம் . அது பரவாயில்லை . உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை வந்தபின்னர்தான் , நீங்கள் நிரந்தர உறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .

உங்கள் வாழ்க்கையையே ஒப்புக்கொடுக்கத்தக்க நபரை நீங்கள் சந்தித்திருந்தால் , இப்படியெல்லாம் யோசிக்க மாட்டீர்கள் , எனக்கா ? தெரியலையே ? சரியான ஆளான்னு தெரியலையே ? அதற்கு பதில் , இப்படி யோசிப்பீர்கள் , சரி , சரி இவர்தான் முதலில் காதலிக்க தொடங்குவோம் . இப்படி நீங்கள் யோசிக்க வில்லை என்றால் , நீங்கள் இன்னும் காதலிக்க தயாராக இல்லை என்று அர்த்தம் 

மேலும் வாழ்வியல் தொடர்பான‌ மேலதிக தகவல்களை பார்வையிட இதில் கிளிக் செய்யவும்.